மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் 

 சேலம் மாநகராட்சி மற்றும் காவேரி மருத்துவமனை இணைந்து நடத்திய மாநகராட்சி  தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமினை மாநகராட்சி ஆணையாளர் திரு.ந. இரவிச்சந்திரன் அவர்கள் இன்று (12.01.2021) கோட்டை பல்நோக்கு அரங்கில் துவக்கி வைத்தார்.

மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் 
மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் 

மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் 
 மாநகராட்சி ஆணையாளர் திரு.ந. இரவிச்சந்திரன் அவர்கள் துவக்கி வைத்தார்

 சேலம் மாநகராட்சி மற்றும் காவேரி மருத்துவமனை இணைந்து நடத்திய மாநகராட்சி  தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமினை மாநகராட்சி ஆணையாளர் திரு.ந. இரவிச்சந்திரன் அவர்கள் இன்று (12.01.2021) கோட்டை பல்நோக்கு அரங்கில் துவக்கி வைத்தார்.
சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளை தூய்மையாகவும், சுகாதாரமாகவும்  பராமரிப்பதிலும், பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதி மேம்பாட்டு பணிகளை மேற்கொள்வதிலும் தூய்மை பணியாளர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.  பருவமழை மற்றும் பண்டிகை காலங்கள் உட்பட அனைத்து நாட்களிலும் குறிப்பாக, கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளிலும் காலை முதல் இரவு வரை ஓய்வின்றி, முழு ஈடுபாட்டோடு பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்களின்  உடல்  நலனை பாதுக்காப்பது நமது கடமை என்பதன் அடிப்படையில்  மாநகராட்சி நிர்வாகம் மண்டலம் வாரியாக மாநகராட்சி பணியாளர்களுக்கான சிறப்பு  மருத்துவ முகாம்களை நடத்தி வருகிறது. அதன் அடிப்படையில்  முதற்கட்டமாக, அஸ்தம்பட்டி மண்டலத்தில் பணியாற்றி வரும் அனைத்து தூய்மை பணியாளர்களுக்கான  சிறப்பு மருத்துவ முகாம் காவேரி மருத்துவமனையுடன் இணைந்து நடத்தப்படுகிறது.  தொடர்ந்து, பிற மண்டலங்களில் பணியாற்றும்  அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும்  சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படவுள்ளது.
  இம்முகாமில், 350 தூய்மை பணியாளர்களுக்கு இரத்தப்பரிசோதனை, இரத்த அழுத்த பரிசோதனை, சக்கரை அளவு பரிசோதனை, இருதய நோய் பரிசோதனை, இ.சி.ஜி., உட்பட அனைத்து பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு, அவர்களுக்கு தேவையான மருத்துவ ஆலோசனைகளும், சிகிச்சைகளும் வழங்கப்பட்டது. 
முகாமில்,  மாநகர் நல அலுவலர் மரு.கே.பார்த்திபன், காவேரி மருத்துவமனை இயக்குநர் திரு. வி.செல்வம்,  மரு.எம். ராஜ் குமார், மரு. எஸ். தனலட்சுமி மற்றும்  சுகாதார ஆய்வாளர்கள் உட்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.