சேலம் மாநகராட்சி சுகாதார பணியாளர்களுக்கு கோவிட் -19 தடுப்பு மருந்து செலுத்தும்பணி 

சேலம் மாநகராட்சி சுகாதார பணியாளர்களுக்கு கோவிட் -19 தடுப்பு மருந்து செலுத்தும்பணி

சேலம் மாநகராட்சி சுகாதார பணியாளர்களுக்கு கோவிட் -19 தடுப்பு மருந்து செலுத்தும்பணி 
கோவிட் -19
சேலம் மாநகராட்சி சுகாதார பணியாளர்களுக்கு கோவிட் -19 தடுப்பு மருந்து செலுத்தும்பணி 
சேலம் மாநகராட்சி சுகாதார பணியாளர்களுக்கு கோவிட் -19 தடுப்பு மருந்து செலுத்தும்பணி 

சேலம் மாநகராட்சி சுகாதார பணியாளர்களுக்கு
கோவிட் -19 தடுப்பு மருந்து செலுத்தும்பணி 
மாநகராட்சி ஆணையாளர் திரு.ந. இரவிச்சந்திரன் அவர்கள் பார்வையிட்டார் 
 
மத்திய அரசு மற்றும் மாநில அரசின் வழிகாட்டுதல்களின்படி, கோவிட்-19 தொற்றுக்கான தடுப்பூசி ஒத்திகை, 08.01.2021 - அன்று சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குமாரசாமிப்பட்டி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லுhரி மருத்துவமனை மற்றும் ஸ்ரீ கோகுலம் மருத்துவமனை ஆகிய 3 
மருத்துவ மனைகளில் ஒத்திகை நடைபெற்றது.
அதனை தொடர்ந்து, மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் தனியார் மருத்துவமனை பணியாளர்களின் பதிவு செய்த 400 நபர்களுக்கு கோவிட் - 19 தடுப்பு மருந்து வழங்குவதற்கு ஏதுவாக 400 டோஸ் தடுப்பு மருந்து சுகாதாரத் துறை மூலம் பெறப்பட்டு குளிர்பதனங்களில் பாதுகாக்கப்பட்டுள்ளது.
சேலம் மாநகராட்சிப் பகுதிக்குட்பட்ட மாநகராட்சி சுகாதார பணியாளர்கள் மற்றும் தனியார் மருத்துவமனை பணியாளர்களுக்கு கோவிட்-19 தடுப்பு மருந்து செலுத்தும் சிறப்பு முகாம் குமாரசாமிப்பட்டி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் தாதகாப்பட்டி நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்களில்  இன்று (18.01.2021) நடைபெற்றது.
மாநகர நல அலுவலர் மரு.கே. பார்த்தீபன், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய 16 மருத்துவர்கள்,  மாநகராட்சி தாய்சேய் நல அலுவலர் திருமதி.என்.  சுமதி உட்பட 206 மாநகராட்சி சுகாதார பணியாளர்களும், தனியார் மருத்துவமனைகளைச் சார்ந்த 25 மருத்துவ பணியாளர்களும் மொத்தம் 231 சுகாதார பணியாளர்கள் இம்முகாம்களில் கோவிட் - 19 தடுப்பு மருந்து செலுத்தப்பட்டு பயனடைந்துள்ளனர்.
சேலம் குமாரசாமிப்பட்டி நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையத்தில் நடைபெற்ற மாநகர சுகாதார பணியாளர்களுக்கான கோவிட் - 19 தடுப்பு மருந்து செலுத்தும்  சிறப்பு முகாமை மாநகராட்சி ஆணையாளர் திரு.ந. இரவிச்சந்திரன் அவர்கள் பார்வையிட்டார். மேலும், முகாமில்  மேற்கொள்ளப்பட்டுள்ள கணினியில் பதிவு செய்யும் வசதி, காத்திருப்போர் அறை, கண்காணிப்பு அறை என 3 அறைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள வசதிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.