சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் வீட்டுத் தோட்டம், மாடித் தோட்டத்திற்கு பயன்படுத்தும் விழிப்புணர்வு
வீட்டுத் தோட்டம், மாடித் தோட்டத்திற்கு பயன்படுத்தும் விழிப்புணர்வு சைக்கிள் பரிசு போட்டியில் மாணவ-மாணவியர் பங்கேற்க மாநகராட்சி ஆணையாளர் திரு.ந.இரவிச்சந்திரன் அவர்கள் அழைப்பு.

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் மக்கும் குப்பைகளை வீட்டிலேயே உரமாக மாற்றி வீட்டுத் தோட்டம், மாடித் தோட்டத்திற்கு பயன்படுத்தும் விழிப்புணர்வு சைக்கிள் பரிசு போட்டியில் மாணவ-மாணவியர் பங்கேற்க மாநகராட்சி ஆணையாளர் திரு.ந.இரவிச்சந்திரன் அவர்கள் அழைப்பு.
சேலம் மாநகரை துhய்மையான, சுகாதாரமான நகரமாக மாற்றும் பணியின் ஒரு பகுதியாக, வீட்டில் உருவாகும் மக்கும் குப்பைகளை வீட்டிலேயே உரமாக்கும் செயல் திட்டத்தினை சேலம் மாநகராட்சி பொதுமக்களின் ஒத்துழைப்போடு பல்வேறு பகுதிகளில் வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தை மேலும் சிறப்பாக மேற்கொள்ள சேலம் மாநகராட்சி சேலம் மண்டல இந்தியன் வங்கியுடன் இணைந்து மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான மாபெரும் சைக்கிள் பரிசுப்போட்டி ஒன்றினை அறிவித்துள்ளது.
இந்த போட்டியில் பங்கேற்கும் மாணவ, மாணவியர்கள் வீட்டில், 1) வீட்டில் உருவாகும் மக்கும் குப்பைகளை உரமாக்க வேண்டும். 2) மாடித் தோட்டம் அமைத்திருக்க வேண்டும். 3) நெகிழி உபயோகமில்லா வீடாக இருக்க வேண்டும். 4) மழை நீர் சேகரிப்பு அமைப்பை ஏற்படுத்தி இருக்க வேண்டும். மேலே குறிப்பிட்டுள்ள செயல்களில் ஏதேனும் ஒன்றினை சிறப்பாக செய்துள்ள மாணவ-மாணவியர்களுக்கு சைக்கிள் பரிசாக வழங்கப்படும்.
பரிசுப் போட்டியில் பங்கேற்க ஆர்வமுள்ள மாணவ மாணவிகள் bitly.com/salemcorp என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கப்பட வேண்டும். போட்டியில் தேர்ந்தெடுக்கப்படும் 200 மாணவ, மாணவியர்களுக்கு தலா ரூ.5000/- மதிப்புள்ள சைக்கிள் பரிசாக வழங்கப்பட உள்ளது.
சேலம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு போட்டியில் கலந்து கொண்டு சைக்கிளை பரிசாக பெறுவதோடு, மாநகரை குப்பையில்லா மாநகரமாக மாற்ற, விழிப்புணர்வு பணியாற்ற வேண்டுமென மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.