சேலம் மாநகராட்சி குப்பையில்லா மாநகரமாக திகழ மாணவர்கள் தூய்மை தூதுவர்களாக செயல்பட வேண்டும்
சேலம் மாநகராட்சியை குப்பையில்லா மாநகரமாக மாற்றும் நடவடிக்கையின் ஒருபகுதியாக, நடைபயிற்சியின் போது மாநகரப் பகுதிகளில் நடைபாதை குப்பைகளை சேகரித்து அகற்றும் சேலம் பிளாகிங் (Salem Plogging) குடியிருப்போர் நலச்சங்கங்கள், தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஒத்துழைப்புடன் சேலம் மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை தோறும் நடைபெற்று வருகிறது.
சேலம் மாநகராட்சி குப்பையில்லா மாநகரமாக திகழ
மாணவர்கள் தூய்மை தூதுவர்களாக செயல்பட வேண்டும்
மாநகராட்சி ஆணையாளர் திரு. ந. இரவிச்சந்திரன் அவர்கள் வேண்டுகோள்.
சேலம் மாநகராட்சியை குப்பையில்லா மாநகரமாக மாற்றும் நடவடிக்கையின் ஒருபகுதியாக, நடைபயிற்சியின் போது மாநகரப் பகுதிகளில் நடைபாதை குப்பைகளை சேகரித்து அகற்றும் சேலம் பிளாகிங் (Salem Plogging) குடியிருப்போர் நலச்சங்கங்கள், தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஒத்துழைப்புடன் சேலம் மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை தோறும் நடைபெற்று வருகிறது.
இன்று 23.01.2021 சூரமங்கலம் மண்டலத்தில் நகரமலை அடிவாரம், ஸ்டேட் பேங்க் காலனி, வண்டிப்பேட்டை ரோடு; அஸ்தம்பட்டி மண்டலத்தில் கோர்ட் ரோடு, ராஜமாணிக்கம் தெரு, வர்மா தோட்டம்; அம்மாபேட்டை மண்டலத்தில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, குறிஞ்சி நகர் உறவுசிங் போர்டு, அண்ணாநகர், கனகராஜ கணபதி தெரு, காமராஜ்நகர் காலனி, குஞ்சான்காடு, ஜே ஜே நகர், தர்ஷன் கார்டன்; கொண்டலாம்பட்டி மண்டலத்தில் ஞானபத்மா அவென்யூ , காவல் துறை குடியிருப்பு, லைன் ரோடு, இ பி காலனி, அண்ணாமலை கார்டன் ஆகிய இடங்களில் சேலம் பிளாகிங் நடைபெற்றது.
இப்பணியில், நகரமலை குடியிருப்போர் நலச்சங்கம், ஸ்பிரிண்ட் அகாடமி ஆப் ஸ்போர்ட்ஸ், செல்வம் நகர் நலச்சங்கம், சேலம் இளைஞர் குழு, தொல்காப்பி அரசு, அழகு பூக்கள் நண்பர் குழு, கிச்சிப்பாளையம் பெண்கள் கைபந்து சங்கம், வர்மா கார்டன் மற்றும் டி வி எஸ் காலனி குடியிருப்போர் நலச்சங்கங்கள், குரு மோட்டார் சைக்கிள் குரூப்ஸ், சேலம் குகை ரோட்டராக்ட், குகை ரோட்டரி சங்கத்தினர் உட்பட 650 தன்னார்வலர்கள் மூலம் 685 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளது.
நகரமலை அடிவாரம் அழகாபுரம் காட்டூர் பகுதியில் மாநகராட்சி ஆணையாளர் திரு.ந. இரவிச்சந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற சேலம் பிளாகிங் (Salem Plogging) பணியில் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் குடும்பத்துடன் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களிடையே, சுற்றுப்புறத்தை சுகாதாரமாக பராமரித்தல், வீட்டு குப்பைகளை மக்கும் குப்பை மக்காத குப்பைகளாக தரம் பிரித்தல், மழை நீர் சேமிப்பு உருவாக்குதல், தடை செய்யப்பட்ட நெகிழிகளை பயன்படுத்தாமல் இருத்தல், வீட்டு தோட்டம், மாடி தோட்டம் உருவாக்குதல் குறித்த விழிப்புணர்வு பணியை மேற்கொண்ட ஆணையாளர் அவர்கள், விழிப்புணர்வு கேள்விகளுக்கு சரியான பதில்களை கூறிய குழந்தைகளுக்கு நினைவு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
தங்கள் பகுதியை சுகாதாரமான, தூய்மையான பகுதியாக திகழச்செய்து குப்பையில்லா மாநகரமாக சேலம் மாநகராட்சியை உருவாக்க மாணவர்கள், தங்களின் பெற்றோர், உறவினர் மற்றும் நண்பர்களிடம் விழிப்புணர்வூட்டும் தூய்மை துhதுவர்களாக செயல்பட வேண்டும் என ஆணையாளர் அவர்கள் கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் மாநகர நல அலுவலர் மரு. கே. பார்த்திபன், மரு. டி.சசிகுமார் உதவி ஆணையாளர் திரு. எம் ஜி. சரவணன், காவல் துறை உதவி ஆய்வாளர் திரு. ஜெயக்குமார், துணை காவல் கண்காணிப்பாளர் (ஓய்வு) திரு. முத்து மாணிக்கம், சுகாதார அலுவலர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் உட்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.