சேலம் மாநகராட்சி குடிசைகள் அதிகமாக உள்ள பகுதிகளில்  40,000 வீடுகளுக்கு இரு வண்ண குப்பை சேகரிப்பு கூடைகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது

சேலம் மாநகராட்சியை தூய்மையான மாநகரமாக மாற்ற, மக்களிடையே விழிப்புணர்வூட்டும் வகையில், மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, தூய்மை விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி  வீடுகளில் சேகரம் ஆகும் குப்பை கழிவுகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து சேகரிக்கும் வகையில் இருவண்ணங்களில் குப்பை சேகரிக்கும் கூடைகள் தொண்டு நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் தன்னார்வர்களின் ஒத்துழைப்புடன் குடியிருப்புகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

சேலம் மாநகராட்சி குடிசைகள் அதிகமாக உள்ள பகுதிகளில்  40,000 வீடுகளுக்கு இரு வண்ண குப்பை சேகரிப்பு கூடைகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது

சேலம் மாநகராட்சி குடிசைகள் அதிகமாக உள்ள பகுதிகளில்  40,000 வீடுகளுக்கு இரு வண்ண குப்பை சேகரிப்பு கூடைகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது - மாநகராட்சி ஆணையாளர் திரு.ந.இரவிச்சந்திரன் அவர்கள்
சேலம் மாநகராட்சியை தூய்மையான மாநகரமாக மாற்ற, மக்களிடையே விழிப்புணர்வூட்டும் வகையில், மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, தூய்மை விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி  வீடுகளில் சேகரம் ஆகும் குப்பை கழிவுகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து சேகரிக்கும் வகையில் இருவண்ணங்களில் குப்பை சேகரிக்கும் கூடைகள் தொண்டு நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் தன்னார்வர்களின் ஒத்துழைப்புடன் குடியிருப்புகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
அம்மாபேட்டை மண்டலம், வள்ளுவர் காலனி பகுதியில் இன்று (13.02.2021) நடைபெற்ற தூய்மை விழிப்புணர்வு நிகழ்ச்சியில், சேலம் வடக்கு இன்னர்வீல் அமைப்பின் சார்பில் வள்ளுவர் காலனி மற்றும் நேரு நகர் பகுதியில் உள்ள 330 வீடுகளுக்கு இருவண்ண குப்பை சேகரிப்பு கூடைகள் வழங்கும் பணியை தொடங்கிவைத்து.  மாநகராட்சி ஆணையாளர் திரு.ந. இரவிச்சந்திரன் அவர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தெரிவித்ததாவது:
 சேலம் மாநகராட்சி குப்பையில்லா மாநகராக மாற்றும் பணியில், மாநகராட்சி நிர்வாகத்துடன் மாநகர பகுதிகளில் உள்ள ஒவ்வொருவரும் ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும். வீட்டில் சேகரமாகும் மக்கும் குப்பைகளை உரமாக மாற்றி வீட்டுத் தோட்டம் அல்லது மாடித் தோட்டம் அமைத்து அவற்றிற்கு உரமாக பயன்படுத்த வேண்டும். குப்பை கழிவுகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து சேகரித்து மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் வரும் போது அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தனித்தனியாக சேகரிக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் பச்சை மற்றும் நீலம் ஆகிய இரு நிறங்களில் குப்பை சேகரிப்பு கூடைகள் வழங்கும் பணியை தன்னார்வலர்களின் ஒத்துழைப்புடன் மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. குடிசைகள் அதிகமாக உள்ள மாநகராட்சி பகுதிகளில் சுமார் 40 ஆயிரம் வீடுகளுக்கு இருவண்ணங்களில் குப்பை சேகரிப்பு கூடைகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை 5750 வீடுகளுக்கு வணிக நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் வாயிலாக இருவண்ண குப்பை சேகரிப்பு கூடைகள் வழங்கப்பட்டுள்ளது.
 குப்பை சேகரிப்பு கூடைகள் வழங்க முன்வரும் வணிக, தொழில் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள், மாநகராட்சியின் சுகாதார அலுவலர் திரு.சு.மணிகண்டன் அவர்களது கைப்பேசி எண். 9976392560, சுகாதார அலுவலர் திரு.ப.மாணிக்கவாசகம் அவர்களது கைப்பேசி எண்.9842699888, சுகாதார அலுவலர் திரு.கி.இரவிச்சந்தர் அவர்களது கைப்பேசி எண்.7598205707, சுகாதார ஆய்வாளர் திரு.ர.சந்திரன்அவர்களது கைப்பேசி எண்.9842890099, என்ற எண்களில் தொடர்பு கொண்டு வழங்கலாம் என தெரிவித்தார்.   
இந்நிகழ்ச்சியில் உதவி ஆணையாளர் திரு.டி. சண்முகவடிவேல், உதவி செயற்பொறியாளர் பொறி.வி. திலகா,  சுகாதார அலுவலர் திரு.பி. மாணிக்கவாசகம், சேலம் வடக்கு இன்னர்வீல் சங்கத் தலைவர் திருமதி. தீபா ராஜா, செயலாளர் திருமதி. லாவண்யா யுகந்தர்  மற்றும் சுகாதார ஆய்வாளர் திரு. சித்தேஸ்வரன்  உட்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மேலும், கொண்டலாம்பட்டி மண்டலம் பண்டிதர் நேரு தெருவில் உள்ள 287 குடியிருப்புகளுக்கு ஆர்.ஆர். பிரியாணி நிறுவன உரிமையாளர் திரு. விஜிவெங்கடேஷன் அவர்கள் சார்பிலும், அம்மாபேட்டை மண்டலத்தில் மேட்டு மக்கான் தெருவில் உள்ள 350 குடியிருப்புகளுக்கு லட்சுமி ஹோட்டல் உரிமையாளர் திரு.எஸ். குமார் அவர்களின் சார்பிலும் குப்பைகளை தரம் பிரித்து சேகரிக்க ஏதுவாக இருவண்ண குப்பை கூடைகளை ஆணையாளர் அவர்கள் வழங்கினார்.