சேலம் மாநகராட்சிகுடிசைப் பகுதிகளை தூய்மையாக பராமரிக்க தொண்டு நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் முன்வர வேண்டும்

சேலம் மாநகராட்சியை தூய்மையான மாநகரமாக மாற்ற, மக்களிடையே விழிப்புணர்வூட்டும் வகையில், கன்னங்காடு, ஜான்சன்பேட்டை, கோர்ட்ரோடு காலனியில் உள்ள வீடுகளுக்கு நரசுஸ் காபி நிறுவனம் சார்பாக, வீட்டில் உள்ள கழிவுகளை மக்கும் குப்பை மற்றம் மக்காத குப்பை என தரம் பிரித்து சேகரிக்கும் வகையில் நீலம் மற்றும் பச்சை வண்ணங்களில் குப்பை சேகரிப்பு கூடைகளை வழங்கும் நிகழ்ச்சி மாநகராட்சி ஆணையாளர் திரு.ந. இரவிச்சந்திரன் அவர்கள் தலைமையில் மணக்காடு சமுதாய நலக் கூடத்தில் நடைப்பெற்றது.

சேலம் மாநகராட்சிகுடிசைப் பகுதிகளை தூய்மையாக பராமரிக்க தொண்டு நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் முன்வர வேண்டும்

சேலம் மாநகராட்சிகுடிசைப் பகுதிகளை தூய்மையாக பராமரிக்க தொண்டு நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் முன்வர வேண்டும் - மாநகராட்சி ஆணையாளர் திரு.ந.இரவிச்சந்திரன் அவர்கள்.
சேலம் மாநகராட்சியை தூய்மையான மாநகரமாக மாற்ற, மக்களிடையே விழிப்புணர்வூட்டும் வகையில், கன்னங்காடு, ஜான்சன்பேட்டை, கோர்ட்ரோடு காலனியில் உள்ள வீடுகளுக்கு நரசுஸ் காபி நிறுவனம் சார்பாக, வீட்டில் உள்ள கழிவுகளை மக்கும் குப்பை மற்றம் மக்காத குப்பை என தரம் பிரித்து சேகரிக்கும் வகையில் நீலம் மற்றும் பச்சை வண்ணங்களில் குப்பை சேகரிப்பு கூடைகளை வழங்கும் நிகழ்ச்சி மாநகராட்சி ஆணையாளர் திரு.ந. இரவிச்சந்திரன் அவர்கள் தலைமையில் மணக்காடு சமுதாய நலக் கூடத்தில் நடைப்பெற்றது.
  இருவண்ணக் குப்பை சேகரிப்பு கூடைகளை குடியிருப்புதாரர்களுக்கு வழங்கி, விழிப்புணர்வு பணியினை தொடங்கிவைத்த மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் தெரிவித்தாவது.

சேலம் மாநகராட்சி பகுதியில் வசிக்கும் குடியிருப்புதாரர்கள், வணிக பெருமக்கள் என அனைவரும் இணைந்து செயல்பட்டால்தான் சேலம் மாநகராட்சியினை தூய்மையான மாநகரமாக மாற்ற இயலும். அனைத்து குடியிருப்புதாரர்களும் தங்கள் வீட்டில் உருவாகும் மக்கும் குப்பைகளை உரமாக மாற்றி வீட்டுத் தோட்டம், மாடித்தோட்டத்திற்கு பயன்படுத்துவதன் வாயிலாக குப்பைத் தொட்டியில்லா நகரினை உருவாக்க இயலும். 
 இப்பகுதிகளில் தூய்மை விழிப்புணர்வூட்டும் பணியில் மாநகர நிர்வாகத்துடன் இணைந்து ஆயிரம் இல்லங்களுக்கு இருவண்ண குப்பை கூடைகளை வழங்க முன்வந்த நரசுஸ் காபி நிறுவனத்தின் பணி பாராட்டுக்குரியது. இதுபோன்று மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள அனைத்து குடிசை பகுதிகளிலும் தூய்மை விழிப்புணர்வு பணியினை மேற்கொள்ள அப்பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் மாநகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து செயலாற்ற முன்வர வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் கேட்டுக்கொண்டார்.
  இந்நிகழ்ச்சியில் உதவி ஆணையாளர் திரு. எம் ஜி. சரவணன், ஸ்ரீ நரசுஸ் காபி நிறுவனத் தலைவர் திரு.பி. சிவானந்தம்,  உதவி செயற்பொறியாளர்கள் பொறி.எம்.ஆர். சிபிசக்கரவர்த்தி, பொறி. வி. திலகா,  சுகாதார அலுவலர் திரு.ஆர். ரவிச்சந்தர் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள்  உட்பட அலுவலர்கள் கலந்து கொண்டன