குப்பை கழிவுகளை கழிவுநீர் கால்வாய்களில் கொட்டும் வணிக நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகள் மீது நடவடிக்கை  மாநகராட்சி ஆணையாளர் திரு.ந. இரவிச்சந்திரன் அவர்கள் தகவல்.

சேலம் மாநகராட்சியை குப்பையில்லா மாநகரமாக மாற்றும் நடவடிக்கையின் ஒருபகுதியாக, மக்களிடையே விழிப்புணர்வூட்டும் வகையில்,  நடைபயிற்சியின் போது மாநகரப் பகுதிகளில் நடைபாதை குப்பைகளை சேகரித்து அகற்றும் சேலம் பிளாகிங் (Salem Plogging) மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை தோறும் நடைபெற்று வருகிறது.

குப்பை கழிவுகளை கழிவுநீர் கால்வாய்களில் கொட்டும் வணிக நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகள் மீது நடவடிக்கை  மாநகராட்சி ஆணையாளர் திரு.ந. இரவிச்சந்திரன் அவர்கள் தகவல்.

குப்பை கழிவுகளை கழிவுநீர் கால்வாய்களில் கொட்டும் வணிக நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகள் மீது நடவடிக்கை 
மாநகராட்சி ஆணையாளர் திரு.ந. இரவிச்சந்திரன் அவர்கள் தகவல்.  

சேலம் மாநகராட்சியை குப்பையில்லா மாநகரமாக மாற்றும் நடவடிக்கையின் ஒருபகுதியாக, மக்களிடையே விழிப்புணர்வூட்டும் வகையில்,  நடைபயிற்சியின் போது மாநகரப் பகுதிகளில் நடைபாதை குப்பைகளை சேகரித்து அகற்றும் சேலம் பிளாகிங் (Salem Plogging) மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை தோறும் நடைபெற்று வருகிறது.
இன்று (09.01.2021)  சூரமங்கலம் மண்டலத்தில்  பாலாஜி அபார்ட்மெண்ட், ஸ்டேட் பேங்க் காலனி, கந்தம்பட்டி   மேம்பால நகர், பள்ளப்பட்டி  பெரிய வயல்காடு, இரத்தினசாமிபுரம், சந்தைப்பேட்டை மெயின்ரோடு; அஸ்தம்பட்டி மண்டலத்தில் அழகாபுரம் நகரமலை மெயின்ரோடு, பெரியபுதுhர்படையப்பா பிளாட், கோரிமேடு என் ஜி ஜி ஓ காலனி, சின்னத்திருப்பதி சின்னமுனியப்பன் கோவில் தெரு, மரவனேரி கோர்ட்ரோடு மெயின், எம் டி எஸ் நகர், குமரசாமிபட்டி நடேசன் காலனி; அம்மாபேட்டை மண்டலத்தில் வாய்க்கால்பட்டறை வால்காடு, பொன்னம்மாபேட்டை அண்ணாநகர், கே என் காலனி சித்தி விநாயகர் கோவில் தெரு, குமரகிரி ஏரிக்கரை, வித்யாநகர்பல்லவன் ரோடு; கொண்டலாம்பட்டி மண்டலத்தில் குகை எருமாபாளையம், புலிகுத்தி தெரு, தாதுபாய்குட்டை, மாரியம்மன் கோவில் தெரு, அன்னதானப்பட்டி தார்பாய் காடு, வள்ளுவர் நகர் ஆகிய  இடங்களில் சேலம் பிளாகிங்  நடைபெற்றது. 
இப்பணியில், அபிராமி கார்டன், கோபாலபுரம் ரோட்டரி வெல்பர் அஷோசியோசன், ஸ்மார்ட் சேலம், ரவுண்ட் டேபிள், சேலம் யூத் கிளப், சென்னை சில்க்ஸ், போத்தீஸ், சிவா டெக்ஸ்டைல், அன்னை இந்திரா நகர் குடியிருப்போர் நலச்சங்கம், சேலம் மோட்டார் சைக்கிள் இளைஞர் சங்கம், ரோட்ராக்ட் சங்கம் உட்பட  680 தன்னார்வலர்கள் மூலம் 735 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளது.  புலிகுத்தி பகுதியில் குப்பைகளை கழிவு நீர் கால்வாயில் கொட்டி சுகாதார கேடு விளைவிக்கும் வகையில் செயல்பட்ட சிற்றுண்டி கடை உரிமையாளரிடமிருந்து  ஆயிரம் ரூபாய் அபராதம்  வசூலிக்கப்பட்டது. 
    
கொண்டலாம்பட்டி மண்டலம் புலிகுத்தி தெரு பகுதியில் நடைபெற்ற சேலம் பிளாகிங் பணியில் சேலம் மாநகராட்சி ஆணையாளர் திரு.ந. இரவிச்சந்திரன் அவர்கள் கலந்து கொண்டார்.
சேலம் மாநகராட்சி சுகாதாரமான, தூய்மையான குப்பையில்லா மாநகரமாக திகழ   அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.  சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் சுகாதார சீர் கேட்டை விளைவிக்கும் வகையில்  குப்பை கழிவுகளை முறையாக மாநகர துhய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்காமல் கழிவுநீர் கால்வாய்கள் மற்றும் தெருக்களில் கொட்டும் வணிக நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அபாரதம் வசூலிக்கப்படும் என  மாநகராட்சி ஆணையாளர் திரு.ந. இரவிச்சந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
மாநகர நல அலுவலர் மரு. கே.பார்த்திபன், உதவி செயற்பொறியாளர் திரு. ஏ. செந்தில்குமார், சுகாதார அலுவலர் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.