திருவள்ளுவர் தினத்தையொட்டி 15.01.2021 அன்று சேலம் மாநகராட்சிப்பகுதிகளில் இறைச்சி கூடங்கள் மற்றும் இறைச்சி கடைகள் செயல்படாது. மாநகராட்சி ஆணையாளர் திரு.ந . இரவிச்சந்திரன் அவர்கள் தகவல்
திருவள்ளுவர் தினத்தையொட்டி 15.01.2021 அன்று இறைச்சி கூடங்கள் மற்றும் இறைச்சி கடைகள் செயல்பட தடை விதித்து அரசு உத்திரவிட்டுள்ளது. அதனடிப்படையில், திருவள்ளுவர் தினத்தன்று (15.01.2021) சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் செயல்படும் இறைச்சி கூடங்கள் மற்றும் இறைச்சி கடைகளில் விற்பனை தடை செய்யப்படுகிறது.
திருவள்ளுவர் தினத்தையொட்டி 15.01.2021 அன்று
சேலம் மாநகராட்சிப்பகுதிகளில்
இறைச்சி கூடங்கள் மற்றும் இறைச்சி கடைகள் செயல்படாது.
மாநகராட்சி ஆணையாளர் திரு.ந . இரவிச்சந்திரன் அவர்கள் தகவல்
திருவள்ளுவர் தினத்தையொட்டி 15.01.2021 அன்று இறைச்சி கூடங்கள் மற்றும் இறைச்சி கடைகள் செயல்பட தடை விதித்து அரசு உத்திரவிட்டுள்ளது. அதனடிப்படையில், திருவள்ளுவர் தினத்தன்று (15.01.2021) சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் செயல்படும் இறைச்சி கூடங்கள் மற்றும் இறைச்சி கடைகளில் விற்பனை தடை செய்யப்படுகிறது.
திருவள்ளுவர் தினத்தன்று இறைச்சி விற்பனை தடை உத்திரவு அமலாக்கத்தினை கண்காணிக்க சேலம் மாநகராட்சியின் நான்கு மண்டல அலுவலகங்களிலும் சுகாதார அலுவலர்கள் தலைமையில் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
அரசின் உத்திரவிற்கிணங்க, சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள இறைச்சி கூடங்கள் மற்றும் இறைச்சி கடைகளை அடைத்து மாநகராட்சி நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் அரசின் உத்திரவினை மீறி சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் இறைச்சி கடைகளின் உரிமையாளர்கள் மீது சட்டபூர்வாமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்.