சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் 198 மையங்கள் வாயிலாக போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாம்
சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள 5 வயதிற்குட்பட்ட சுமார் 89 ஆயிரம் குழந்தைகளுக்கு 31.01.2021 அன்று போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்காக 198 சிறப்பு மையங்கள் அமைக்கப்படவுள்ளது என மாநகராட்சி ஆணையாளர் திரு.ந. இரவிச்சந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் 198 மையங்கள் வாயிலாக
போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாம்
31.01.2021 அன்று நடைபெறும்
மாநகராட்சி ஆணையாளர் திரு.ந. இரவிச்சந்திரன் அவர்கள் தகவல்
சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள 5 வயதிற்குட்பட்ட சுமார் 89 ஆயிரம் குழந்தைகளுக்கு 31.01.2021 அன்று போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்காக 198 சிறப்பு மையங்கள் அமைக்கப்படவுள்ளது என மாநகராட்சி ஆணையாளர் திரு.ந. இரவிச்சந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்கள், மாநகராட்சி மருந்தகங்கள், துணை சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிக்கூடங்கள், பழைய மற்றும் புதிய பேருந்து நிலையங்கள், இரயில் நிலையங்கள் ஆகிய இடங்களில் அமைக்கப்படும் சிறப்பு முகாம்கள் வாயிலாக தொடர்ந்து 3 நாட்களுக்கு சொட்டு மருந்து வழங்கப்படும்.
மேலும், தனி நடமாடும் குழுக்கள் மூலம், குடிசை பகுதி மக்கள், சாலையோரங்களில் மக்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு தனி கவனம் செலுத்தி சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து தனியார் மருத்துவமனைகளுக்கும் நேரில் சென்று குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள சிறப்பு முகாம்களுக்கென 1 லட்சம் (Dose) போலியோ சொட்டு மருந்து பெறப்பட்டு 16 மையங்களில் (ILR) தயார் நிலையில் பாதுகாக்கப்பட்டுள்ளது. மருத்துவ அலுவலர்கள், மருத்துவ பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், நாட்டு நலத்திட்ட மாணவ,மாணவியர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களைச் சார்ந்த 1500 சுகாதார மற்றும் இதர பணியாளர்கள் இப்பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.
31.01.2021 காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து முகாம்கள் செயல்படும். பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்கு முகாம் அன்றே, சொட்டு மருந்தை பெற முகாம்களுக்கு அழைத்து செல்ல வேண்டும். முகாமில் தவிர்க்க முடியாத காரணத்தினால் சொட்டு மருந்து வழங்கப்படாத குழந்தைகளுக்கு வீடு – வீடாகச்சென்று சொட்டு மருந்து வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில், அரசின் தீவிர நடவடிக்கைகளால் 2004 ஆம் ஆண்டு முதல் போலியோ நோயால் ஒரு குழந்தைக்கூட பாதிக்கவில்லை. போலியோ இல்லா தமிழகம் என்ற நிலை தொடர, குழந்தைகளின் பெற்றோர்கள் மாநகராட்சி நிர்வாகத்துடன் ஒத்துழைக்குமாறு மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.