சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்  முடி திருத்தகங்கள் / அழகு நிலையங்கள், ஸ்பா, மசாஜ் நிலையங்கள் நடத்துவதற்கு உரிமம் பெற உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும்  மாநகராட்சி ஆணையாளர் திரு.ந . இரவிச்சந்திரன் அவர்கள் தகவல்

தமிழ்நாடு சட்டம் 25/1981, பிரிவு 360-ன் படியும், 2018 ஆண்டு தமிழ்நாடு நகராட்சி சட்டங்கள் (ஐந்தாவது திருத்தம்) திருத்தம் செய்யப்பட்ட அட்டவணை (IV)ல் குறிப்பிடப்பட்டுள்ள நோக்கங்களுக்காக செயல்படும் நிறுவனங்கள், உரிமம் பெற்று செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 
முடி திருத்தகங்கள் / அழகு நிலையங்கள், ஸ்பா, மசாஜ் நிலையங்கள் நடத்துவதற்கு உரிமம் பெற உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும்
 மாநகராட்சி ஆணையாளர் திரு.ந . இரவிச்சந்திரன் அவர்கள் தகவல்
  தமிழ்நாடு சட்டம் 25/1981, பிரிவு 360-ன் படியும், 2018 ஆண்டு தமிழ்நாடு நகராட்சி சட்டங்கள் (ஐந்தாவது திருத்தம்) திருத்தம் செய்யப்பட்ட அட்டவணை (IV)ல் குறிப்பிடப்பட்டுள்ள நோக்கங்களுக்காக செயல்படும் நிறுவனங்கள், உரிமம் பெற்று செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 அதனடிப்படையில், சேலம் மாநகராட்சிக்குட்பட்ட இடங்களில் முடிதிருத்தம், அழகு நிலையம், ஸ்பா, மசாஜ் நிலையங்கள் நடத்துவோர், சேலம் மாநகராட்சியிலிருந்து உரிய விண்ணப்பங்களை பெற்று, உடனடியாக சேலம் மாநகராட்சி ஆணையாளருக்கு விண்ணப்பித்து  உரிமம் பெற்று கொள்ள வேண்டும்.
 30 நாட்களுக்குள் விண்ணப்பித்து உரிமம் பெறாத நிறுவனங்கள், தொழில் உரிமம் இன்றி செயல்படுவதாக கருதி, நிலைய உரிமையாளரும், நடத்துவோரும் பொறுப்பானவர்களாக கருதி, நிலையத்தை மூடி முத்திரையிடுவதோடு சட்ட பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சேலம் மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்.