மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு கண் சிகிச்சை முகாம்

சேலம் மாநகராட்சி மற்றும் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய மாநகராட்சி  தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு கண் சிகிச்சை மருத்துவ முகாமினை மாநகராட்சி ஆணையாளர் திரு.ந. இரவிச்சந்திரன் அவர்கள் இன்று (13.02.2021) ஜாகிர் அம்மாபாளையம், வேல் முருகன் திருமண அரங்கில் துவக்கி வைத்தார்.

மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு கண் சிகிச்சை முகாம்
மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு கண் சிகிச்சை முகாம்

மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு கண் சிகிச்சை முகாம் மாநகராட்சி ஆணையாளர் திரு.ந. இரவிச்சந்திரன் அவர்கள் துவக்கி வைத்தார்
 சேலம் மாநகராட்சி மற்றும் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய மாநகராட்சி  தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு கண் சிகிச்சை மருத்துவ முகாமினை மாநகராட்சி ஆணையாளர் திரு.ந. இரவிச்சந்திரன் அவர்கள் இன்று (13.02.2021) ஜாகிர் அம்மாபாளையம், வேல் முருகன் திருமண அரங்கில் துவக்கி வைத்தார்.
சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளை தூய்மையாகவும், சுகாதாரமாகவும்  பராமரிப்பதிலும், பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதி மேம்பாட்டு பணிகளை மேற்கொள்வதிலும், பருவமழை மற்றும் பண்டிகை காலங்கள் உட்பட அனைத்து நாட்களிலும் குறிப்பாக, கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளிலும் காலை முதல் இரவு வரை ஓய்வின்றி, முழு ஈடுபாட்டோடு பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்களின்  உடல்  நலனை கருத்தில் கொண்டு  மாநகராட்சி நிர்வாகம் மண்டலம் வாரியாக தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு  மருத்துவ முகாம்களை நடத்தி வருகிறது. 
அதன் அடிப்படையில், சூரமங்கலம் மண்டலத்தில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்களுக்கான  சிறப்பு கண் சிகிச்சை முகாம் அகர்வால் மருத்துவமனையுடன் இணைந்து நடத்தப்படுகிறது.  தொடர்ந்து, பிற மண்டலங்களில் பணியாற்றும்  அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும்  சிறப்பு கண் சிகிச்சை மருத்துவ முகாம்கள் நடத்தப்படவுள்ளது. இம்முகாமில், 285 தூய்மை பணியாளர்களுக்கு கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 
முகாமில்,  மாநகர் நல அலுவலர் மரு.கே.பார்த்திபன், உதவி ஆணையாளர் திரு.டி. ராம்மோகன், உதவி செயற்பொறியாளர் திரு.செல்வராஜ், அகர்வால் மருத்துவனை கண் பரிசோதனை நிபுணர்கள் செல்வி. ரூபாஸ்ரீ, திரு.ஜெசிம், சுகாதார அலுவலர்கள் திரு.எஸ். மணிகண்டன், திரு.கே. இரவிச்சந்தர் மற்றும்  சுகாதார ஆய்வாளர்கள் உட்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.