போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாம்.

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாம்களை மாநகராட்சி ஆணையாளர் திரு.ந. இரவிச்சந்திரன் அவர்கள், இன்று (31.01.2021) குமாரசாமிபட்டி நகர்ப்புற ஆரம்ப சுகாதார மைய சிறப்பு முகாமில் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கி  தொடங்கி வைத்தார்.

போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாம்.
போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாம்.

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் 
போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாம் 
ஆணையாளர் திரு.ந. இரவிச்சந்திரன் அவர்கள் தொடங்கி வைத்தார் 

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாம்களை மாநகராட்சி ஆணையாளர் திரு.ந. இரவிச்சந்திரன் அவர்கள், இன்று (31.01.2021) குமாரசாமிபட்டி நகர்ப்புற ஆரம்ப சுகாதார மைய சிறப்பு முகாமில் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கி  தொடங்கி வைத்தார்.

மாநகராட்சிப் பகுதிகளில், அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, 16 நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்கள், 5 மாநகராட்சி மருந்தகங்கள், 11 துணை சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிக்கூடங்கள், பழைய மற்றும் புதிய பேருந்து நிலையங்கள், இரயில் நிலையங்கள் உட்பட 198 இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இம்முகாம்களில் தொடர்ந்து 3 நாட்களுக்கு சொட்டு மருந்து வழங்கப்படும். 

20 சிறப்பு நடமாடும் குழுக்கள் வாயிலாக குடிசை பகுதிகள் மற்றும்  சாலையோரங்களில் வசிக்கும் பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு இருப்பிடத்திற்கே சென்று சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. தேவாலயங்கள் மற்றும் திருக்கோயில்களுக்கும் நடமாடும் குழுவினர் சென்று சொட்டு மருந்து வழங்கி வருகின்றனர்.  150 மருத்துவம் சார்ந்த பணியாளர்கள், 300 அங்கன்வாடி பணியாளர்கள், 16 ரோட்டரி சங்கங்களை சார்ந்த தன்னார்வலர்கள், நாட்டு நலத்திட்ட மாணவ,மாணவியர்கள் என 1500 பணியாளர்கள்  இப்பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர். மருத்துவ அலுவலர்கள் தலைமையில் 16 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு, முகாம்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

 சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் கணக்கிடப்பட்டுள்ள சுமார் 89 ஆயிரம் குழந்தைகளுக்கும் முழு அளவில்  போலியோ சொட்டு மருந்து வழங்க திட்டமிடப்பட்டு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. தவிர்க்க முடியாத காரணங்களால் சொட்டு மருந்து வழங்கப்படாத குழந்தைகளை கண்டறிந்து, ஏழு தினங்களுக்குள் வீடு – வீடாகச்சென்று சொட்டு மருந்து வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

 இந்நிகழ்ச்சியில் மாநகர நல அலுவலர் மரு.கே. பார்த்தீபன், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் மரு.டி. செண்பகவடிவு,  மாநகராட்சி தாய்சேய் நல அலுவலர் திருமதி.என்.  சுமதி, சேலம் கேலக்சி ரோட்டரி சங்க நிர்வாகிகள் மகதீஸ்வரன், மணிகண்டன், மனோகரன், கே.எஸ் வெங்கடேஷன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.