சேலம் தெற்கு சட்டமன்றத் தொகுதியில் துணை வாக்குச்சாவடிகள் அமைப்பது தொடர்பான

சேலம் மாநகராட்சிப் பகுதிகளை உள்ளடக்கிய 90. சேலம் தெற்கு சட்டமன்றத் தொகுதியில் புதியதாக துணை வாக்குச்சாவடிகள் அமைப்பது தொடர்பாக, அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடனான ஆலோசனைக் கூட்டம் சேலம் தெற்கு சட்ட மன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் அவர்களின் தலைமையில் இன்று (01.02.2021) மாநகராட்சி அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற்றது.

சேலம் தெற்கு சட்டமன்றத் தொகுதியில் துணை வாக்குச்சாவடிகள் அமைப்பது தொடர்பான

சேலம் தெற்கு சட்டமன்றத் தொகுதியில் துணை வாக்குச்சாவடிகள் அமைப்பது தொடர்பான  ஆட்சேபனைகளை 04.02.2021 க்குள் தெரிவிக்க வேண்டும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு மாநகராட்சி ஆணையாளர் திரு.ந.இரவிச்சந்திரன் அவர்கள் வேண்டுகோள்
சேலம் மாநகராட்சிப் பகுதிகளை உள்ளடக்கிய 90. சேலம் தெற்கு சட்டமன்றத் தொகுதியில் புதியதாக துணை வாக்குச்சாவடிகள் அமைப்பது தொடர்பாக, அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடனான ஆலோசனைக் கூட்டம் சேலம் தெற்கு சட்ட மன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் அவர்களின் தலைமையில் இன்று (01.02.2021) மாநகராட்சி அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற்றது.
கோவிட் - 19  பெருந்தொற்று  பரவுதலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1000 வாக்காளர்களுக்கு அதிகமாக உள்ள வாக்குச்சாவடிகளை கண்டறிந்து துணை வாக்குச்சாவடிகள் அமைத்திட இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அதன் அடிப்படையில் சேலம் தெற்கு சட்ட மன்றத் தொகுதியில் ஏற்கனவே உள்ள 264 வாக்குச்சாவடிகளில்,  1000 வாக்காளர்களுக்கு அதிகமாக உள்ள 132 வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு கூடுதலாக துணை வாக்குச்சாவடிகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. புதியதாக உருவாக்கப்பட உள்ள 132 துணை வாக்குச்சாவடிகளின் விபரப்பட்டியல்கள் ஆலோசனை கூட்டத்தின் போது அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் வழங்கப்பட்டது. 
அனைத்து கட்சி பிரமுகர்களுடன் துணை வாக்குச்சாவடிகள் அமைப்பது தொடர்பாக ஏதேனும் ஆட்சேபனைகள்  இருப்பின் இம்மாதம் 4 ஆம்  தேதிக்குள் (04.2.2021)  சேலம் தெற்கு சட்ட மன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் அவர்களிடம் எழுத்து பூர்வமாக தெரிவிக்க வேண்டுமென மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார். 
  ஆலோசனைக் கூட்டத்தில் அ.இ.அ.தி.முக. சார்பில் திரு.எம்.பாலு, திரு. கிருஷ்ணமூர்த்தி திரு. பி.முருகேசன், திரு.என்.யாதவமூர்த்தி  தி.மு.க சார்பில் திரு.வி.கணேசன், திரு.என்.சந்திரசேகர், பா.ஜ.க. சார்பில் திரு.ஆர்.பி. கோபிநாத், திரு. பி.என்.ராஜ்குமார் காங்கிரஸ் சார்பில் திரு.ஜி. ஜெயப்பிரகாஷ், திரு.எஸ்.ஷேக்இமாம்,  தே.மு.தி.க. சார்பில் திரு.எஸ்.கோபிநாத், திரு.எஸ்.ஆர்.அன்வர்  திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் திரு.மாஸ்கணேஷ் உட்பட அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் உதவி ஆணையாளர்கள் திரு.ப.ரமேஷ்பாபு, திரு.பி.சண்முகவடிவேல்,  தேர்தல் தனித்துணை வட்டாட்சியர் திருமதி.உ.ஜாஸ்மின் பெனாசிர் உட்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.