சேலம் மாநகராட்சி உங்களின் நகரம். உங்கள் நகரினை சுகாதாரமாக, தூய்மையாக பராமரிப்பது உங்கள் கடமை.

சேலம் மாநகராட்சியை தூய்மையான மாநகரமாக மாற்றும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மக்களிடையே விழிப்புணர்வூட்டும் வகையில், அஸ்தம்பட்டி மண்டலம் முள்ளுவாடி மக்கான் தெரு மற்றும் கோட்டை அண்ணா நகர் பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு, வீட்டில் உள்ள கழிவுகளை மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து சேகரிக்கும் வகையில் நீலம் மற்றும் பச்சை வண்ணங்களில் குப்பை சேகரிப்பு கூடைகளை வழங்கும் நிகழ்ச்சி மாநகராட்சி ஆணையாளர் திரு.ந. இரவிச்சந்திரன் அவர்கள் தலைமையில்  சகாதேவபுரம் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைப்பெற்றது. 

சேலம் மாநகராட்சி உங்களின் நகரம். உங்கள் நகரினை சுகாதாரமாக, தூய்மையாக பராமரிப்பது உங்கள் கடமை.
சேலம் மாநகராட்சி உங்களின் நகரம். உங்கள் நகரினை சுகாதாரமாக, தூய்மையாக பராமரிப்பது உங்கள் கடமை.

சேலம் மாநகராட்சி உங்களின் நகரம். உங்கள் நகரினை சுகாதாரமாக, தூய்மையாக பராமரிப்பது உங்கள் கடமை. - மாநகராட்சி ஆணையாளர் திரு.ந.இரவிச்சந்திரன் அவர்கள்.
சேலம் மாநகராட்சியை தூய்மையான மாநகரமாக மாற்றும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மக்களிடையே விழிப்புணர்வூட்டும் வகையில், அஸ்தம்பட்டி மண்டலம் முள்ளுவாடி மக்கான் தெரு மற்றும் கோட்டை அண்ணா நகர் பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு, வீட்டில் உள்ள கழிவுகளை மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து சேகரிக்கும் வகையில் நீலம் மற்றும் பச்சை வண்ணங்களில் குப்பை சேகரிப்பு கூடைகளை வழங்கும் நிகழ்ச்சி மாநகராட்சி ஆணையாளர் திரு.ந. இரவிச்சந்திரன் அவர்கள் தலைமையில்  சகாதேவபுரம் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைப்பெற்றது. 
 குடியிருப்புதாரர்களுக்கு இருவண்ணக் குப்பை சேகரிப்பு கூடைகளை வழங்கும்  பணியினை தொடங்கிவைத்து, நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் விழிப்புணர்வு உரையாற்றும் போது தெரிவித்ததாவது:

சேலம் மாநகராட்சி உங்களின் நகரம். உங்கள் நகரினை சுகாதாரமாக, தூய்மையாக பராமரிப்பது உங்கள் கடமை. மாநகரினை தூய்மையாக பராமரிக்க பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வந்தாலும் சுற்றுப்புறப் பகுதிகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு பொது மக்களிடையே இருந்தால் மட்டுமே குப்பையில்லா மாநகரமாக சேலம் மாநகராட்சியை மாற்ற இயலும். எனவே தான், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சுகாதார விழிப்புணர்வு முகாம்கள் மாநகராட்சியால் நடத்தப்பட்டு வருகிறது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் தொண்டுள்ளம் படைத்தவர்களின் உதவியுடன் குடியிருப்புகளுக்கு, மக்கும் குப்பை, மக்காத குப்பை என வீட்டில் உள்ள குப்பை கழிவுகளை தரம் பிரித்து சேகரிப்பதற்கு ஏதுவாக, இரு வண்ண குப்பை கூடைகள் வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் வீட்டில் சேகரமாகும் குப்பை கழிவுகளை தரம் பிரித்து, சேகரித்து இப்பகுதிக்கு வரும் மாநகராட்சி தூய்மை பணியாளர்களிடம் முறையாக ஒப்படைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். 
மாநகர நிர்வாகத்துடன் இணைந்து தூய்மை விழிப்புணர்வூட்டும் பணியில், 1,000 வீடுகளுக்கு விஜய ஸ்ரீ கட்டுமான நிறுவனம் சார்பில், இருவண்ண குப்பை சேகரிப்பு கூடைகள் வழங்கப்பட்டது.  முன்னதாக சூரமங்கலம் மண்டலம், வீரகாளியம்மன் கோவில் தெருவில் உள்ள 300 வீடுகளுக்கு போத்தீஸ் ஜவுளி நிறுவனம் சார்பாக இருவண்ண குப்பை சேகரிப்பு கூடைகள் வழங்கப்பட்டது. 
  இந்நிகழ்ச்சிகளில் உதவி ஆணையாளர்கள் திரு திரு.டி. ராம்மோகன், திரு. எம் ஜி. சரவணன், விஜய ஸ்ரீ கட்டுமான நிறுவன திரு. ரஜேந்திரன், திரு. ஆர். பாலசுப்பிரமணியம், போத்தீஸ் ஜவுளி நிறுவன மேலாளர் திரு. செங்கோட்டையன், உதவி செயற்பொறியாளர்கள் பொறி.எம்.ஆர். சிபிசக்கரவர்த்தி, பொறி.எ. செல்வராஜ், சுகாதார அலுவலர் திரு.எஸ். மணிகண்டன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள்  உட்பட அலுவலர்கள் கலந்து கொண்டன