குறைக்கப்பட்ட கட்டணத்தில் தொங்கும் பூங்கா பல்நோக்கு அரங்கு மற்றும் கோட்டை பல்நோக்கு அரங்கு
சேலம் மாநகராட்சியில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் செர்ரி ரோடு, தொங்கும் பூங்கா வளாகத்தில் கட்டப்பட்டுள்ள தொங்கும் பூங்கா பல்நோக்கு அரங்கு மற்றும் ஜலால்கான் தெரு - கோட்டை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள கோட்டை பல்நோக்கு அரங்குகளை பொதுமக்கள் தங்கள் குடும்ப விழாக்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளுக்கு குறைக்கப்பட்ட கட்டணத்தில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் திரு.ந. இரவிச்சந்திரன் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.
குறைக்கப்பட்ட கட்டணத்தில் தொங்கும் பூங்கா பல்நோக்கு அரங்கு மற்றும் கோட்டை பல்நோக்கு அரங்குகளை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள
மாநகராட்சி ஆணையாளர் திரு.ந.இரவிச்சந்திரன் அவர்கள் வேண்டுகோள்.
சேலம் மாநகராட்சியில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் செர்ரி ரோடு, தொங்கும் பூங்கா வளாகத்தில் கட்டப்பட்டுள்ள தொங்கும் பூங்கா பல்நோக்கு அரங்கு மற்றும் ஜலால்கான் தெரு - கோட்டை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள கோட்டை பல்நோக்கு அரங்குகளை பொதுமக்கள் தங்கள் குடும்ப விழாக்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளுக்கு குறைக்கப்பட்ட கட்டணத்தில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் திரு.ந. இரவிச்சந்திரன் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.
தொங்கும் பூங்கா பல்நோக்கு அரங்கு மற்றும் கோட்டை பல்நோக்கு அரங்குகள், முழுமையான குளிர்சாதன வசதியுடன் திருமண நிகழ்வுகளுக்கு பயன்படுத்தக் கூடிய வகையில் பெரிய அளவிலான மேடைகள், நவீன வசதிகளுடன் கூடிய தங்கும் அறைகள், சமையற் கூடம், நவீன கழிவறை மற்றும் குளியலறை வசதிகள், 24 மணி நேர குடிநீர் வசதி, வாகன நிறுத்துமிட வசதி என அனைத்து வசதிகளுடன் எழில்மிகு தோற்றத்துடன் கட்டப்பட்டுள்ளது.
தொங்கும் பூங்கா பல்நோக்கு அரங்கு திருமண நிகழ்ச்சிகளுக்கு, 24 மணி நேரம் மற்றும் 12 மணி நேரத்திற்கான வாடகை கட்டணமாக ரூ. 3 இலட்சம் மற்றும் 18 சதவீத ஜி.எஸ்.டி வரியாக ரூ. 54 ஆயிரமும், இதர நிகழ்ச்சிகளுக்கு 12 மணி நேரத்திற்கான வாடகை கட்டணமாக ரூ.2 இலட்சம் மற்றும் 18 சதவீத ஜி.எஸ்.டி வரியாக ரூ. 36 ஆயிரமும், சுத்தம் செய்வதற்கான கட்டணம் ரூ. 30 ஆயிரம் மற்றும் 1 யூனிட்டுக்கு மின்சார பயனீட்டுக்கட்டணம் ரூ.13 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் மின்சார பயனீட்டுக்கட்டணம் மற்றும் சுத்தம் செய்வதற்கான கட்டண முன்வைப்புத் தொகையாக ரூ.1 இலட்சமும் என மறுநிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கோட்டை பல்நோக்கு அரங்கு திருமண நிகழ்ச்சிகளுக்கு, 24 மணி நேரம் மற்றும் 12 மணி நேரத்திற்கான வாடகை கட்டணமாக ரூ. 1.50 இலட்சம் மற்றும் 18 சதவீத ஜி.எஸ்.டி வரியாக ரூ. 27 ஆயிரமும், இதர நிகழ்ச்சிகளுக்கு 12 மணி நேரத்திற்கான வாடகை கட்டணமாக ரூ.1 இலட்சம் மற்றும் 18 சதவீத ஜி.எஸ்.டி வரியாக ரூ. 18 ஆயிரமும், சுத்தம் செய்வதற்கான கட்டணம் ரூ. 20 ஆயிரம் மற்றும் 1 யூனிட்டுக்கு மின்சார பயனீட்டுக்கட்டணம் ரூ.13 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் மின்சார பயனீட்டுக்கட்டணம் மற்றும் சுத்தம் செய்வதற்கான முன்வைப்புத் தொகையாக ரூ.1 இலட்சமும் என மறுநிர்ணயம் செய்யப்பட்டுள்ளது,
சேலம் மாநகராட்சியின் மையப்பகுதியில் அமைந்துள்ள தொங்கும் பூங்கா பல்நோக்கு அரங்கத்திற்கு 0427- 426 58 55 என்ற தொலைபேசி எண்ணிலும், கோட்டை பல்நோக்கு அரங்கத்திற்கு 0427- 426 48 55 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு மறுநிர்ணயம் செய்யப்பட்ட வாடகையில் முன்பதிவு செய்து பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆணையாளர் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.