சேலம் செஞ்சோலைஅமைப்பு சார்பில் இருவண்ண குப்பை சேகரிப்பு கூடைகள்

சேலம் மாநகராட்சியை தூய்மையான மாநகரமாக மாற்ற, மக்களிடையே விழிப்புணர்வூட்டும் வகையில் சேலம் செஞ்சோலை அமைப்பு சார்பில் கொண்டலாம்பட்டி மற்றும் சீலநாயக்கன்பட்டி பகுதியில்   உள்ள வீடுகளுக்கு மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து சேகரிப்பதற்காக நீலம் மற்றும் பச்சை வண்ணங்களில் குப்பை சேகரிப்பு கூடைகளை மாநகராட்சி ஆணையாளர் திரு.ந. இரவிச்சந்திரன் அவர்கள் வழங்கினார். 

சேலம் செஞ்சோலைஅமைப்பு சார்பில் இருவண்ண குப்பை சேகரிப்பு கூடைகள்
சேலம் செஞ்சோலைஅமைப்பு சார்பில் இருவண்ண குப்பை சேகரிப்பு கூடைகள்

சேலம் செஞ்சோலைஅமைப்பு சார்பில் இருவண்ண குப்பை சேகரிப்பு கூடைகள் மாநகராட்சி ஆணையாளர் திரு.ந.இரவிச்சந்திரன் அவர்கள் வழங்கினார்.
 சேலம் மாநகராட்சியை தூய்மையான மாநகரமாக மாற்ற, மக்களிடையே விழிப்புணர்வூட்டும் வகையில் சேலம் செஞ்சோலை அமைப்பு சார்பில் கொண்டலாம்பட்டி மற்றும் சீலநாயக்கன்பட்டி பகுதியில்   உள்ள வீடுகளுக்கு மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து சேகரிப்பதற்காக நீலம் மற்றும் பச்சை வண்ணங்களில் குப்பை சேகரிப்பு கூடைகளை மாநகராட்சி ஆணையாளர் திரு.ந. இரவிச்சந்திரன் அவர்கள் வழங்கினார். 
 வீடுகளில் உள்ள திடக்கழிவுகளை மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து,  தங்கள் பகுதிக்கு வரும் தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்க விழிப்புணர்வூட்டும் வகையில் சீலநாயக்கன்பட்டி, சக்தி நகர் குடிசை பகுதியில் உள்ள 80 வீடுகளுக்கு  இரு வண்ண குப்பை சேகரிக்கும் கூடைகளை வழங்கி திடக்கழிவு மேலாண்மை குறித்து மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் கூறியதாவது;
  நோயற்ற வாழ்வு வாழ வீட்டையும், சுற்றுப்புறத்தையும், நாம் நடந்து செல்லும் சாலையையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு அனைவரிடமும் உருவாக வேண்டும்.  வீட்டில் சேகரம் ஆகும் மக்கும் குப்பைகளை வீட்டிலேயே உரமாக மாற்றம் செய்து தங்கள் குடியிருப்பு பகுதியிலோ, மாடி தோட்டத்திலோ உள்ள செடிகளுக்கு உரமாக பயன்படுத்திட அனைவரும் முன்வர வேண்டும். சுற்றுப்புற சூழலுக்கு மாசு விளைவிக்கும், மழைநீர் தேங்கி கொசு உற்பத்திக்கு அடிப்படையாக அமையும், அரசால் தடைசெய்யப்பட்ட ஒரு முறை   மட்டும் பயன்படுத்தும் நெகிழிகளை முற்றிலும் அனைவரும் தவிர்க்க வேண்டும் - என கேட்டுக்கொண்டார்.
பின்னர், நெய்மண்டி அருணாசலம் தெருவில் பத்மாவதி அடுக்குமாடி குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் குடியிருப்பில் உள்ள 48 வீடுகளுக்கும் மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் இரு வண்ணக் குப்பைக் கூடைகளை வழங்கினார். ஜாரி கொண்டலாம்பட்டியில் தமிழகரசு கழகத்தெருவில் திரு.ரங்கராஜ் என்பவரது வீட்டில் அமைக்கப்பட்டுள்ள மாடித் தோட்டத்தினை பார்வையிட்டு, அவர்களை ஊக்குவிக்கும் வகையில் நினைவு பரிசு வழங்கி பாராட்டினார்.
  இந்நிகழ்ச்சிகளில், மாநகர் நல அலுவலர் மரு. பார்த்திபன், உதவி ஆணையாளர் திரு.ப.ரமேஷ்பாபு, திரு. உதவி செயற்பொறியாளர்  திரு.ஆர்.செந்தில்குமார், செஞ்சோலை அமைப்பு நிர்வாகிகள் டாக்டர்.சசிகுமர், திரு.தங்கவேல், திரு.மணிசங்கர், திரு. நவின், திரு. ஈஸ்வர மூர்த்தி, திரு. ரத்தினவேல், பத்மாவதி அடுக்குமாடி குடியிருப்போர் நலச்சங்க தலைவர் 
திரு.கந்தசாமி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.