சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்
சேலம் மாநகராட்சியின் தனிக்குடிநீர் திட்டம் செயல்படும் மேட்டூர் தொட்டில்பட்டி பகுதியில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தால் மின் பராமரிப்புப் பணிகள் வருகின்ற 04.02.2021 அன்று நடைபெறவுள்ளமையால் மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.
மேட்டூர் தொட்டில்பட்டி பகுதியில் மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் 04.02.2021 அன்று சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தம் மாநகராட்சி ஆணையாளர் திரு.ந. இரவிச்சந்திரன் அவர்கள் தகவல்
சேலம் மாநகராட்சியின் தனிக்குடிநீர் திட்டம் செயல்படும் மேட்டூர் தொட்டில்பட்டி பகுதியில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தால் மின் பராமரிப்புப் பணிகள் வருகின்ற 04.02.2021 அன்று நடைபெறவுள்ளமையால் மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.
மின் தடை காரணமாக மாநகராட்சியின் தனிக் குடிநீர் திட்டம் இயங்காது என்பதால் 04.02.2021 வியாழக்கிழமை ஒருநாள் மட்டும் மாநகராட்சிப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
எனவே பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு, மாநகராட்சி ஆணையாளர் திரு. ந. இரவிச்சந்திரன் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.