மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் வருகையை கைபேசி வாயிலாக பதிவு செய்யும் புதிய வசதி

சேலம் மாநகராட்சியில் உள்ள நான்கு மண்டலங்களிலும் பணியாற்றும் பணியாளர்களின் நலத்தினை கருத்தில் கொண்டு, கைபேசி மூலம் வருகை பதிவு செய்யும் புதிய வசதியினை இன்று (17.02.2021)     மாநகராட்சி  ஆணையாளர் திரு. ந.  இரவிச்சந்திரன்  அவர்கள் மாநகராட்சி மைய அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துவக்கி வைத்தார்.

மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் வருகையை கைபேசி வாயிலாக பதிவு செய்யும் புதிய வசதி

மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் வருகையை கைபேசி வாயிலாக பதிவு செய்யும் புதிய வசதி மாநகராட்சி ஆணையாளர் திரு.ந. இரவிச்சந்திரன் அவர்கள் துவக்கி வைத்தார்
 சேலம் மாநகராட்சியில் உள்ள நான்கு மண்டலங்களிலும் பணியாற்றும் பணியாளர்களின் நலத்தினை கருத்தில் கொண்டு, கைபேசி மூலம் வருகை பதிவு செய்யும் புதிய வசதியினை இன்று (17.02.2021)     மாநகராட்சி  ஆணையாளர் திரு. ந.  இரவிச்சந்திரன்  அவர்கள் மாநகராட்சி மைய அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துவக்கி வைத்தார்.
 சேலம் மாநகராட்சியில் உள்ள அம்மாபேட்டை, சூரமங்கலம், அஸ்தம்பட்டி, கொண்டலம்பட்டி ஆகிய நான்கு மண்டலங்களில் உள்ள 60 வார்டு பகுதிகளிலும் 2110 தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். பணியாளர்களது வருகை சம்மந்தப்பட்ட வார்டு அலுவலகங்களில் பயோமெட்ரிக் முறையில்  கைரேகை பதிவு செய்யப்பட்டு வருகிறது. வாகனங்களில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் அதிகாலையிலேயே வார்டு அலுவலகங்களுக்கு சென்று கைரேகை பதிவு செய்த பின்னர் தாங்கள் பணிபுரியும் பகுதிகளுக்கு சென்று பணிபுரிவதால் கால விரயமும், பணியாளர்களுக்கு சிரமமும் ஏற்படுகிறது. இதனை தவிர்க்கும் வகையில் கைபேசி வாயிலாக பயோமெட்ரிக் முறையில் கைரேகை பதிவு செய்யும் புதிய நடைமுறை செயல்படுத்தபடுகிறது.  
 இப்புதிய நடைமுறையின் படி தூய்மை பணி மேற்பார்வையாளர்கள், வாகனங்களில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களின் வருகையை குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட பகுதிகளுக்கு சென்று கைபேசி மூலம் பயோமெட்ரிக் கைரேகையினை பதிவு செய்வர். முதற்கட்டமாக, இந்நடைமுறை அம்மாபேட்டை மண்டலத்தில் உள்ள 16 வார்டு அலுவலகங்களில் பணிபுரியும் 495 தூய்மை பணியாளர்கள் பயனடையும் வகையில் அம்மாபேட்டை மண்டலத்தில் உளள 17 தூய்மை பணி மேற்பார்வையாளர்களுக்கும் செல்பேசி மற்றும் பயோமெட்ரிக் கைரேகை பதிவு கருவிகளை மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் வழங்கினார். 
 மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களின் நலனினை பாதுகாக்கும் வகையில் தேவையான நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. மாநகராட்சியை தூய்மையாகவும், சுகாதாரமாகவும் பராமரிப்பதில் தங்களது பணியினை தொடர்ந்து சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என ஆணையாளர் அவர்கள் கேட்டுக்கொண்டார். 
 நிகழ்ச்சியில் மாநகர நல அலுவலர் மரு.கே. பார்த்திபன், உதவி செயற்பொறியாளர் திருமதி.வி. திலகா, சுகாதார அலுவலர்கள் திரு.எஸ். மணிகண்டன், திரு. மாணிக்கவாசகம், திரு.கி. இரவிச்சந்தர் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், தூய்மை பணி மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.