வள்ளுவர் காலனி பகுதியில்  "நகருக்குள் வனம்" உருவாக்கும் பணி

சேலம் மாநகராட்சி, அம்மாபேட்டை மண்டலம் வள்ளுவர் காலனி  பகுதியில் சுற்றுப்புற சூழலை பேணிகாக்கும் வகையில் தனியார் பங்களிப்புடன் "நகருக்குள் வனம்" (ஆலையறயமi குடிசநளவ) உருவாக்கும் பணியினை மரக்கன்று நட்டு, மாநகராட்சி ஆணையாளர் திரு.ந. இரவிச்சந்திரன் அவர்கள் தொடங்கிவைத்தார்.   நகர்ப்புற வனங்களில் வைக்கப்படும் நாட்டு மரங்களுக்கு அதிக இடைவெளி தேவையில்லை என்பதால் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்  நகருக்குள் வனத்தில் அதிக அளவில் மரங்களை நட இயலும். அதிக அளவில் மரங்களை நடுவதன் வாயிலாக காற்றில் உள்ள கரியமலவாயுவை (ஊடீ2) கட்டுப்படுத்தி வாயுமண்டலத்தில் ஆக்ஸிஜனை அதிக படுத்துவதோடு காற்று மாசினை கட்டுப்படுத்த இயலும். அதனடிப்படையில் சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டு நகருக்குள் வனம் உருவாக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும் கூடுதலாக மாநகரின் பல்வேறு பகுதிகளில் தனியார் பங்களிப்புடன் நகருக்குள் வனங்களை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வள்ளுவர் காலனி பகுதியில்  "நகருக்குள் வனம்" உருவாக்கும் பணி

வள்ளுவர் காலனி பகுதியில்  "நகருக்குள் வனம்" உருவாக்கும் பணி மாநகராட்சி ஆணையாளர் திரு.ந.இரவிச்சந்திரன் அவர்கள் துவக்கி வைத்தார்

சேலம் மாநகராட்சி, அம்மாபேட்டை மண்டலம் வள்ளுவர் காலனி  பகுதியில் சுற்றுப்புற சூழலை பேணிகாக்கும் வகையில் தனியார் பங்களிப்புடன் "நகருக்குள் வனம்" (ஆலையறயமi குடிசநளவ) உருவாக்கும் பணியினை மரக்கன்று நட்டு, மாநகராட்சி ஆணையாளர் திரு.ந. இரவிச்சந்திரன் அவர்கள் தொடங்கிவைத்தார். 
 நகர்ப்புற வனங்களில் வைக்கப்படும் நாட்டு மரங்களுக்கு அதிக இடைவெளி தேவையில்லை என்பதால் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்  நகருக்குள் வனத்தில் அதிக அளவில் மரங்களை நட இயலும். அதிக அளவில் மரங்களை நடுவதன் வாயிலாக காற்றில் உள்ள கரியமலவாயுவை (ஊடீ2) கட்டுப்படுத்தி வாயுமண்டலத்தில் ஆக்ஸிஜனை அதிக படுத்துவதோடு காற்று மாசினை கட்டுப்படுத்த இயலும். அதனடிப்படையில் சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டு நகருக்குள் வனம் உருவாக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும் கூடுதலாக மாநகரின் பல்வேறு பகுதிகளில் தனியார் பங்களிப்புடன் நகருக்குள் வனங்களை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் வள்ளுவர் நகர் பகுதியில் சுமார் 6,000 சதுர அடி பரப்பளவில் நகருக்குள் வனம் உருவாக்கப்படுகிறது. இப்பகுதியில் நடுவதற்காக புங்கன், வேம்பு, பூவரசு, மகாகனி, நாவல், தேக்கு, இலந்தை இனங்கள் உட்பட 500 மரக்கன்றுகளை சேலம் மிட்டவுன் ரோட்டரி சங்கத்தினர் வழங்கியுள்ளனர். மேலும் மரக்கன்றுகளை பராமரிக்கும்  பணிகளை வள்ளுவர் நகர் நலச்சங்கத்தினர் மேற்கொள்வர். இப்பகுதியில் உள்ள கிணறு சீரமைக்கப்பட்டு அப்பகுதி மக்கள் முழுமையாக பயன்படுத்தும் வகையில் தனியார் பங்களிப்புடன் மேம்படுத்தப் படுவதோடு, அப்பகுதி மக்கள் மாலை நேரங்களில் அமருவதற்கு ஏதுவாக இருக்கை வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளது.
நகருக்குள் வனங்களில் நடப்படும் மரங்களை மாநகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து  பாதுகாத்து, பராமரித்திட தன்னார்வலர்கள் மற்றும் தொண்டுநிறுவனங்கள் முன் வர    வேண்டும் - என ஆணையாளர் அவர்கள் கேட்டுக் கொண்டார். 

  இந்நிகழ்ச்சியில் உதவி ஆணையாளர் திரு.டி. சண்முகவடிவேல், உதவி செயற்பொறியாளர் பொறி.வி. திலகா,  சுகாதார அலுவலர் திரு.பி. மாணிக்கவாசகம், சேலம் மிட்டவுன் ரோட்டரி தலைவர் திரு.பி. புருசோத்தமன், செயலாளர் திரு.ஜெ. செந்தூர் குமரன், உறுப்பினர்கள் திரு.எம். ரகுநாதன், திரு. கலைமதியழகன், தெற்கு ரோட்டரி சங்கத் தலைவர் மரு.ஜி தொல்காப்பியரசு, வள்ளுவர் காலனி நலச்சங்கத் தலைவர் திரு. ராஜ்குமார், அழகு பூக்கள் நண்பர்கள் குழு தலைவர் திரு.மோகன், மற்றும் சுகாதார ஆய்வாளர் திரு. சித்தேஸ்வரன்  உட்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.